ETV Bharat / state

சித்த மருத்துவத்தால் கரோனாவை வெல்ல முடியும் - தமிழ்நாடு அரசுக்கு சவால் - Request for more bedding

சென்னை: படுக்கை வசதிகளை அதிகரித்து கரோனா தொற்று ஏற்படும் நபர்களை அன்றே அனுப்பினால் உயிரிழப்பு இல்லாமல் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர் வீரபாபு சவால் விடுத்துள்ளார்.

veerababu
veerababu
author img

By

Published : Aug 7, 2020, 8:06 PM IST

Updated : Aug 7, 2020, 9:08 PM IST

இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவம் காலூன்றிய பிறகு சித்த மருத்துவத்திற்கான வேலை குறைந்தது. தற்போது நீடித்து வரும் கரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை, நோய்வாய்ப்பட்ட பெரியவர்களைத் தான் தாக்குகிறது என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. இந்த இக்கட்டான சூழலில், கரோனா போரை எதிர்த்து போராட கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டது சித்த மருத்துவம்.

கரோனாவுக்கு பதிலடி கொடுக்கும் முன்பே வைக்கப்பட்ட முக்கிய கேள்வி, இந்த கரோனா தொற்று சாதாரண காய்ச்சல் கிடையாது, இது புதுவிதமான வைரஸ், இதனை எப்படி கையாள்வது என்பதே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம். இதில், சித்த மருத்துவம் என்ன சாதனைகள் செய்திட முடியும் என அலோபதி மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். நுண்ணறிவு ஆய்வறிக்கை போன்றே, சித்த மருத்துவ ஆய்வாளர்கள் சற்று நெருக்கடியை சந்தித்தனர் என்றே தெரிவிக்கலாம். ஆனால், துவண்டு போகவில்லை, அயராது உழைத்து தாங்கள் யார் என்பதை சித்த மருத்துவர்கள் நிரூபித்துவிட்டனர்.

அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் கரோனா பாதிப்பாளர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை பெறும் நபர்கள் யாரும் இதுவரை இறக்கவில்லை என்பதே மகிழ்ச்சி செய்தி. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரதாப் ரெட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சித்த மருத்துவத்துவம் மூலம் பூரண குணமடைந்துள்ளார்.

71 வயதில் கரோனாவை வென்றவருடைய அனுபவங்களை அவரது உதவியாளர் கூறியதாவது, "ஜூலை 28ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டு நண்பர்கள் மூலம் இந்த மருத்துவமனையில் சேர்ந்தோம். பத்து நாள்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றோம். தற்போது எந்தவித மூச்சுத்திணறல் பிரச்னையும் இல்லை. வழக்கமாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார். ஆக்சிஜன் அளவு 98, 99 என்ற நிலையில் உள்ளது. ரத்தத்தில் இருந்த பிரச்னைகளும் குறைந்து சாதாரண அளவிற்கு வந்துள்ளன.

அவருக்கு மொழி பிரச்னை இருந்ததால் உதவிக்கு நானும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தேன். முழு உடல் கவசம் எதுவும் போடாமல் முகக்கவசம் மட்டுமே அனைவரும் அணிந்திருந்தனர். கடந்த 5 மாதமாக மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு எந்த நோய் அறிகுறியும் வரவில்லை. அவருக்கு அருகில் இருந்து தேவையான அனைத்தையும் அருகிலிருந்து முகக்கவசம் அணிந்து செய்தேன்" என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவத் துறையில் பணிபுரியும் பரிசோதனை தலைமை ஆய்வாளர் மீனா கூறியதாவது, "ஜூலை 26ஆம் தேதி எனக்கு காய்ச்சல் வந்தது. பரிசோதனை செய்த பிறகு மருத்துவரை சந்தித்தபோது, உடனடியாக மருத்துவனையில் சேருமாறு அறிவுறுத்தினார். காய்ச்சல் 105, 106 டிகிரி வரை இருந்தது. கோவிட் உரிய அனைத்து அறிகுறிகளும் இருந்தன. கசாயம் மற்றும் நம்பிக்கையை மருத்துவர் அளித்து எனக்கு சிகிச்சையளித்தார். நுரையீரலில் அதிக அளவு நோய்த் தொற்று இருந்தாலும் என்னால் உணர முடிந்தது.

கரோனா சிகிச்சை பெற்றவர்

அதுகுறித்து மருத்துவரிடம் கூறியபோது ஆக்சிஜன் அளித்து சரி செய்கிறோம் எனக் கூறி தற்போது எனக்கு ஆக்சிஜன் அளவு 99 விழுக்காடாக உள்ளது. கரோனா வைரஸ் மிகவும் மோசமான ஒரு நோய்தான். அதனால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது" என்றார்.

சித்த மருத்துவர் வீரபாபு கூறியதாவது, "அழகர் பொறியியல் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டது. இதுவரை 3ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை பார்த்துள்ளோம். 2ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதுவரை எந்த வித உயிரிழப்பும் ஏற்படாமல் பாதுகாக்க நடத்தி வருகிறோம்.

டிடைமர், ஐஎல்சிக்ஸ், பெரட்டின் ஆகியவற்றின் அளவுகள் அதிகமாக இருந்தால் கரோனா பாதித்த நோயாளிகளுக்கு பாதுகாப்பாக சிகிச்சையளிக்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் சித்த மருத்துவத்தின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையினால் வெகுவாக அதன் அளவுகள் குறைந்து வருவதை காண முடிந்தது. சித்த மருத்துவத்தில் சாதாரண அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்ற கருத்தை மாற்ற வேண்டும். சித்த மருத்துவத்தின் மூலம் எந்த வகையான சூழ்நிலையில் உள்ள நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதுதான் எனது கருத்தாகும்.

சித்த மருத்துவர் வீரபாபு

ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் முதல் நாளிலேயே சித்த மற்றும் ஆங்கில மருத்துவத்தை இணைத்து சிகிச்சையளித்தால் அவர்கள் ஆபத்திற்கு செல்லாமல் மீட்டெடுக்க முடியும். சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர் மட்டுமே மருந்து கிடையாது. நோயின் அறிகுறிக்கேற்ப 15 வகையான மருந்துகளை பயன்படுத்துகிறோம். படுக்கை வசதிகளை அதிகரித்து சென்னையில் கரோனா தொற்று ஏற்படும் நபர்களை அன்றே அனுப்பினால் உயிரிழப்பு இல்லாமல் செய்ய முடியும் என்பது எனது சவால்.

வயதானவர்கள் மற்றும் தீவிர நிலைக்கு சென்றவர்கள் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் இருக்கிறது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே வந்தால் எளிதில் சிகிச்சையளிக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: 14ஆவது ஆண்டு நெல் திருவிழா கோலாகல தொடக்கம்! விவசாய பெருமக்கள் ஆரவாரம்!

Last Updated : Aug 7, 2020, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.