ETV Bharat / state

'திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட வேண்டும்' - ஜெயக்குமார் - local body election

திமுக நிறைவேற்றியதாக கூறிய 202 வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்  உள்ளாட்சி தேர்தல்  சி பா ஆதித்தனார்  சி பா ஆதித்தனா பிறந்தநாள்  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்  மாஃபா பாண்டியராஜன்  Si Pa Aditanar 117 Birth Anniversary  Si Pa Aditanar  jeyakumar  local body election  election
ஜெயக்குமார்
author img

By

Published : Sep 27, 2021, 5:40 PM IST

சென்னை: 'இதழியலின் முன்னேர்' என அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலையின்கீழ், அவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு, மாலை மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அவரது திருவுருவப்படத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், அமைப்பினர்கள் எனப் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சி.பா. ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசியதாவது, 'தமிழ்நாட்டில் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருவதில் இருந்தே தெரிகிறது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்கு உள்ளது என்பது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைதி தவழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் 50 விழுக்காடு நிறைவேற்றியதா, சிறு குழந்தைகளின் ஆசை தோசை விளையாட்டு போல தான் அவர்களின் கருத்து உள்ளது.

இதுவரை 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைப் பட்டியலிட முடியுமா.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றனர்.

மக்கள் பிரச்னைகளை எங்களுடையே வாசலுக்கே வந்து தெரிவிக்கலாம் எனக் கூறினர். ஆனால், இன்றும் புகார் தெரிவிக்க வருபவர்கள் தீக்குளிக்கும் நிலையிலேயே உள்ளது. இதுதான் திமுக ஆட்சியின் அவல நிலை' என்றார்.

இதையும் படிங்க: ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.