ETV Bharat / state

நாய் மீது துப்பாக்கி சூடு - புகாரளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாய் மீது துப்பாக்கி சூடு
நாய் மீது துப்பாக்கி சூடு
author img

By

Published : Mar 11, 2022, 4:12 PM IST

சென்னை : சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர், ஸ்ரீதர் (37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் 'சிக் குக்' என்ற பெயரில் நாட்டு நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை ஶ்ரீதர் வேலைக்குச் செல்லும்போது சிக் குக் உடலில் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளது.

கம்பியில் கிழித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்த ஶ்ரீதர் வேலைக்குச் சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்தபோது நாயின் உடலில் ரத்தம் நிற்காமல் வந்த வண்ணம் உள்ளதைப் பார்த்த ஸ்ரீதர், உடனடியாக அந்த நாயை மீட்டு அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

நாய் மீது துப்பாக்கிச் சூடு

ரத்தம் நிற்காமல் வந்ததால் உள்ளே காயம் ஏதேனும் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துசென்று நாய்க்கு ரத்தம் வந்த இடத்தை ஸ்கேன் எடுத்துள்ளனர்.

ஸ்கேன் ரிசல்ட்டில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் சிறிய ரக தோட்டா (துப்பாக்கி குண்டு) இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வேளச்சேரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து, உடலில் இருந்த தோட்டாவை வெளியே எடுத்து தையலும் போட்டுள்ளனர்.

கண்டுகொள்ளாத காவல்துறை

பின்னர், தொடர்ந்து நாயைப் பராமரித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து ஸ்ரீதர் இன்று பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்புகார் கொடுத்தார். அதனுடன் நாயின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஆனால், பெரும்பாக்கம் காவல்துறையினர் இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மாடியிலிருந்து நாய் ஒன்றைத் தூக்கி வீசிய நபரை காவல்துறையினர் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால், தற்போது நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகப் புகார் அளித்தும் பெரும்பாக்கம் காவல் துறையினர் மெத்தனமாக செயல்பட்டு அலட்சியம்காட்டி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. நாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நடு ரோட்டில் வெட்டிக் கொலை...! வெளியான சிசிடிவி காட்சிகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.