ETV Bharat / state

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த அதிர்ச்சி பதில்! - TN Govt

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த அதிர்ச்சி பதில்!

author img

By

Published : Jul 12, 2022, 10:44 PM IST

சென்னை: பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான மசோதாவின் நிலை குறித்து, “தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டு முறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன்வடிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன” என்று, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று ஆளுநர் செயலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது.

மிகவும் கால தாமதமாக (98 நாட்கள் கழித்து) ஜூலை 7 ஆம் தேதியிட்ட கடிதம், ஜூலை 11 ஆம் தேதி அன்று கிடைக்கப் பெற்றோம். பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது. அதில், "சம்மந்தப்பட்ட அலுவலரின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது" என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.

இதில் "சம்மந்தப்பட்ட அலுவலரி"ன் பரிசீலனை என்றால் எவ்வாறு புரிந்து கொள்வது, ஆளுநர் செயலகத்திலா? அல்லது குடியரசுத்தலைவர் செயலகத்திலா? ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த அதிர்ச்சி பதில்!
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆர்டிஐக்கு ஆளுநர் செயலகம் அளித்த அதிர்ச்சி பதில்!

முதலமைச்சர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து, "சம்மந்தப்பட்ட அலுவலரின் பரிசீலனை"யில் உள்ளது என்று தெளிவற்ற, நேரடி பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல்லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ளதால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு சென்றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

பதில் திருப்தியாக இல்லை, நேரடி பதில் வேண்டும் என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அலுவலருக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பி உள்ளோம். தமிழ்நாடு அரசு, சட்ட முன்வடிவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து, தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். தமிழ்நாடு மக்களுக்கு தெளிவான விடை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.