ETV Bharat / state

ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கு: வெளியான திடுக்கிடும் தகவல்! - afganistan

ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட தம்பதியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Heroin  drug case
Heroin drug case
author img

By

Published : Sep 24, 2021, 7:58 AM IST

குஜராத் துறைமுகத்தில் கப்பல் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடந்த 18ஆம் தேதி வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.

ஹெராயின் பறிமுதல்

அத்தகவலின் பேரில் முந்த்ரா துறைமுகத்தில் முகத்துக்குப் பூசும் பவுடர் கொண்டுவரப்பட்ட இரண்டு கண்டெய்னர்களில், மூன்றாயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல்செய்து ஆய்வு மேற்கொண்டபோது, அதன் மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் என்பது தெரியவந்தது.

இருவர் கைது

முதற்கட்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி வைஷாலி ஆகியோர் ஆப்கானிஸ்தானிலிருந்து குஜராத் முந்த்ரா துறைமுகம் வழியாகப் போதைப்பொருள் கடத்தியது தெரியவந்தது.

இந்த நிலையில் சென்னை கேளப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த சுதாகர், வைசாலி தம்பதியினரை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கைதுசெய்து, பத்து நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர். இத்தம்பதியின் மீது சென்னை, விஜயவாடா, டெல்லி, குஜராத் ஆகிய பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதாகர் வாக்குமூலம்

விசாரணையில் சுதாகர், வைஷாலி தம்பதியினர் ஆசி சோலார் சிஸ்டம் என்ற பெயரில் போலி நிறுவனத்தை ஆரம்பித்ததும், இதில் சுதாகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசி டிரேடிங் கம்பெனியைத் தொடங்கி நடத்திவந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் ஆப்கானிஸ்தான் ஹஸன் ஹுசைன் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஈரான் நாட்டு துறைமுகத்திலிருந்து, இந்தியாவில் உள்ள குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு டால்கம் பவுடரை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றனர். இந்தியாவில் அமித் என்ற தரகர் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாவித் என்ற தரகரைத் தொடர்புகொண்டு இந்த இறக்குமதியில் ஈடுபட்டதாக சுதாகர் தெரிவித்தார்.

அப்படி அனுப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்களில்தான் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கடத்தப்பட்டதை வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இதே நிறுவனத்தின் பெயரில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு டால்கம் பவுடர் என்ற பெயரில் பொருள்கள் இறக்குமதி ஆகியிருப்பது முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்தது.

அதுமட்டுமன்றி அப்பொருள்கள் சென்னை முகவரிக்கும் சேரும்படி அனுப்பப்பட்டதை, துறைமுக ஆவணங்களின் மூலம் வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

தொடர் விசாரணை

ஆப்கானிஸ்தானிலிருந்து ஜூன் 9ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட பொருள்கள் போதைப்பொருள்தானா எனச் சென்னை காவல் துறையினர் உதவியுடன், வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

டெல்லி குல்தீப் சிங் என்ற பெயரில் இந்தப் பொருள்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் குல்தீப் சிங் என்பவர் பெயரில் இந்தியாவில் இறக்குமதி செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நிறுவனத் தரகர் அமித் கூறியதன் அடிப்படையில் ஆவணங்கள் தயாரித்து இறக்குமதி செய்ததாக சுதாகர் தெரிவித்தார்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர், விஜயவாடா, தமிழ்நாடு ஆகிய மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: தாலிபான்கள் நால்வர் உள்பட 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.