ETV Bharat / state

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்

தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார்.

shivdas-meena-appointed-as-a-new-chief-secretary-of-tamilnadu
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா தேர்வு
author img

By

Published : Jun 29, 2023, 1:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி கட்சி, வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால், அவரது பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடைகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்புகள் தொடர்ந்து எழுந்தன. தமிழ்நாட்டின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Maamannan: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது ‘மாமன்னன்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.