சென்னை: முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு அளித்துள்ள புகாரில், கர்நாடகாவில் தும்சூர் மாவட்டத்தில் கோட்டேகிரி என்ற குக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு அருகே பழைய அரசு மரம் உள்ளதாகவும், அதற்கடியில் ராஜராஜ சோழனின் முதல் பேரனாகிய ஸ்வஸ்ஸ்ரீ உடையார் ராஜாதிராஜ தேவர் என்பவர் பொறித்த கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில் பழங்கால தமிழ் எழுத்துகளும், கிரந்த எழுத்துகளும் உள்ளது.
இதன்மூலம் 949 ஆண்டுகளுக்கு முன்பாக கோட்டேகிரியில் ராஜராஜ சோழ மன்னரால் சோழீஸ்வரம் என்ற பெயரில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சிவன் கோவில் தற்போது காணவில்லை எனவும் கோயிலில் இருந்த சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ராஜராஜ சோழ மன்னர் கோட்டேகிரியில் வெட்டிய ஏரி மட்டும் தற்போது அங்கிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சிவன் கோயிலில் இருந்து திருடுபோன சிலைகளை கர்நாடக அரசுடன் இணைந்து மீட்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இலங்கையை ஆண்ட ராஜராஜ சோழன் ! - ஆய்வு நடத்த பொன்.மாணிக்கவேல் கோரிக்கை