ETV Bharat / state

சென்னையில் மிளிரும் கட்டடங்கள்; வண்ணமயமான சுவர் ஓவியங்களைத் தீட்டும் திருநங்கைகள்

சென்னை ரயில் நிலையங்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் வண்ணமயமான சுவர் ஓவியங்களைத் தீட்டும் திருநங்கைகள், சமூகத்தில் திருநங்கைகள் மீது உள்ள பார்வையை மாற்ற இது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்த ஒரு சிறுதொகுப்பு...

author img

By

Published : Jul 29, 2022, 10:56 PM IST

சென்னையில் மிளிரும் கட்டடங்கள்; வண்ணமயமாக சுவர் ஓவியங்களை தீட்டும் திருநங்கைகள்

சென்னை மாநகரில் தற்போது ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பல்வேறு கட்டட முகப்புகள், சுற்றுச்சுவர்களில் கண்ணைக்கவரும் வண்ணமயமான ஓவியங்களைக்காண முடிகிறது. இந்த ஓவியங்கள் காண்போர் மத்தியில் புத்துணர்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுகிறது. இவ்வாறு ஓவியம் தீட்டும் பணியில் தொழில் முறை ஓவியர்களை தாண்டி, பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். தற்போது இந்த கலைப் பணியில் திருநங்கைகளும் இணைந்துள்ளனர்.

சென்னையில் மிளிரும் கட்டடங்கள்; வண்ணமயமாக சுவர் ஓவியங்களைத்தீட்டும் திருநங்கைகள்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ‘அரவாணி ஆர்ட் புராஜெக்ட்' என்ற தொண்டு நிறுவனம், திருநங்கைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்டப் பல பகுதிகளில் சுவரோவியங்கள் வரையும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கைகள் சமீபத்தில் வரைந்துள்ள சுவரோவியங்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சுவர் ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டுள்ள திருநங்கை ஸ்மித்தா அபிமுக்தா கூறுகையில், ”அரவாணி ஆர்ட்ஸ் புராஜெக்ட் தொண்டு நிறுவனம் வாழ்வாதாரம் இல்லாத திருநங்கைகளை ஒன்றிணைத்து சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் அரவாணி ஆர்ட்ஸ் புராஜெக்ட் திருநங்கைகளை வைத்து சுவர் ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

சென்னையில் மிளிரும் கட்டடங்கள்; வண்ணமயமாக சுவர் ஓவியங்களைத் தீட்டும் திருநங்கைகள்

சென்னையில் அரவாணி ஆர்ட்ஸ் புராஜெக்ட் குழுவில் எட்டு பேர் உள்ளோம். நாங்கள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், கண்ணகி நகர் குடியிருப்புப்பகுதிகள், திருவான்மியூர் ரயில் நிலையம், எர்ணாவூர் குடியிருப்பு உள்ளிட்டப் பல்வேறு இடங்களிலும் அரசுப்பள்ளிகள் மற்றும் நூலகங்களிலும் சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளோம். தற்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழின் ஐந்திணைகளை வகைப்படுத்தும் வகையில் சுவர் ஓவியங்களை வரைந்துள்ளோம்.

இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் மிகவும் குறைவானது. அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் திருநங்கைகள் மீது தவறான கண்ணோட்டம் மட்டும் தான் உள்ளது. அதையும் தாண்டி திருநங்கைகள் சாதிக்க இதுபோன்ற அரவாணி ஆர்ட்ஸ் புராஜெக்ட் தொண்டு அமைப்புகள் உதவுகின்றன. என்னதான் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை சமூகத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சென்னையில் மிளிரும் கட்டடங்கள்; வண்ணமயமான சுவர் ஓவியங்களைத் தீட்டும் திருநங்கைகள்

இளம் திருநங்கைகள் நிறைய பேர் படித்துள்ளனர். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடாவது அரசு ஒதுக்கித்தர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான இடத்தை உறுதி செய்தால் நிறைய திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டில் இருந்தே படிப்பார்கள்.

திருநங்கைகளுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால் தான் வீட்டை விட்டு வெளியே ஓடி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளப்படுகிறார்கள்.

திருநங்கைகளுக்கு படிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் நிச்சயம் அதை பயன்படுத்திக்கொள்வார்கள். இது எங்களுடைய கருத்தாக மட்டும் இல்லாமல் பொதுமக்களும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் இந்த சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும்” என்றார்.

திருநங்கை காஞ்சனா கூறுகையில், ”நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். கடந்த எட்டு ஆண்டுகளாக ஸ்டேஜ் டான்ஸ் நிகழ்ச்சிகளை செய்து வந்தேன். இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அரவாணி ஆர்ட் புராஜெக்ட் அமைப்புதான் திருநங்கைகளுக்கு சுவரோவியப் பயிற்சி வழங்கியது.

இந்த அமைப்புடன் இணைந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறேன். தற்போது ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுவர் ஓவியங்கள் வரைந்துள்ளோம்.

நமக்கு ஆயிரம் வலிகள், கஷ்டங்கள் இருந்த போதிலும் சுவர் ஓவியம் ஆர்வத்துடன் வரையும்போது அந்த கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விடுகிறது. தற்போது தமிழ் கலாசாரங்கள் பற்றிய ஓவியங்களை வரைந்து வருகிறோம். இந்தச்சமூகத்தில் இன்னமும் திருநங்கைகளுக்கு பல அவமானங்கள், ஒதுக்குதல் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதையும் தாண்டி எங்களாலும் சாதிக்க முடியும் என்ற ஒரு எண்ணத்தோடு தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறோம்.

இதுபோன்ற வாய்ப்புகள் எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளோம். பொதுமக்கள் எங்கள் மீது வைத்துள்ள பார்வையை முற்றிலும் மாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசும் எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கினால் எங்களாலும் சாதித்துக்காட்ட முடியும்” என்றார்.

இதையும் படிங்க: சர்வதேச புலிகள் தினம்: காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.