ETV Bharat / state

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை! சென்னையில் சோகம் - Youth suicide for Online trading - YOUTH SUICIDE FOR ONLINE TRADING

பூந்தமல்லியில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த வினோத்குமார்
உயிரிழந்த வினோத்குமார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2024, 1:53 PM IST

சென்னை: பூந்தமல்லி அடுத்த சென்னீர்க்குப்பம் ஸ்ரீ தேவி நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவரது மனைவி ரமி (28). இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை ஒன்று உள்ளது. வினோத்குமார் எல்ஐசி ஏஜெண்டாக பணி புரிந்து வந்துள்ளார். மேலும், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறிய அளவு முதலீடுகள் செய்து லாபம் ஈட்டியுள்ளார்.‌ இதனால், ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஷேர் மார்க்கெட்டில் பல்வேறு நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால், தொடர்ந்து அவருக்கு இதில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்துள்ளார்.

இதனையடுத்து, தனது சொத்துக்களை விற்று கடன்களை அடைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் மீண்டும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முறையயும், அவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் வினோத்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் மர்ம பூஜை? மண்ணில் புதைந்திருப்பது மனித உடலா? பொதுமக்கள் பீதி!

இந்த நிலையில் இவரது பெற்றோர் நேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து அவரது மனைவி வெளியில் சென்றுள்ளார். இதனையடுத்து, வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.15 லட்சம் கடன் கொடுத்த பூந்தமல்லியைச் சேர்ந்த ஒருவர் இவருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வேதையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அவரது மனைவி வீட்டுற்கு வந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர், இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் வினோத்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.