திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த்தி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இதில் நடிகர்கள் அப்பு குட்டி, தீபா, காயத்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் குருமூர்த்தி பாடல்கள்களை எழுதியுள்ள நிலையில் ஜெர்சன் இசையமைத்துள்ளார்.
இந்த போஸ்டர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாடல் ஆசிரியர் குருமூர்த்தி, “இந்த படம் அனைத்து சமுதாயத்தினரும் பார்க்கக் கூடிய வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் ஒரு சமூகத்தின் அவல நிலையை எடுத்து கூறும். இதில் அனைத்து சமூகத்தினரும் இருப்பார்கள் ஆனால் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்க்கை போலியான என்கவுண்டரால் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த படம்.
இப்போது சாதியை மையமாக வைத்து வரும் படங்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களின் சாதி மோதல்களை மையமாக கொண்டு வருகிறது. இதில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் ஒற்றுமையாக இருக்கும் சமுதாயத்தில் வேற்றுமையை பரப்புவதாக உள்ளது.
இதையும் படிங்க: ரஜினியின் வேட்டையன் உடன் மோதும் ஜீவாவின் 'பிளாக்'!
இவர்கள் படத்தால் மீண்டும் சாதிய மோதல் ஏற்படுகிறது. மாமன்னன் மற்றும் கர்ணன் படங்கள் இவ்வாறு வேற்றுமை உணர்வையும் வன்முறைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க கூடய படமாக உள்ளது. இயக்குநரும், நடிகர்களும் படத்தை எடுத்துவிட்டு போயிருவார்கள் ஆனால் அதன் விளைவாக தற்போது சாதிய மோதல் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
முந்தைய கால படங்களில் நாயகரும், வில்லனு ஒரு சாதியாக இருந்த படி கதை கலத்தில் மோத்தல் ஏற்படும். ஆனால் தற்போது சாதியை மையமாக வைத்து நாயகர் இரு சாதியாவும், வில்லன் ஒரு சாதியாகவும் இருந்து மோதி கொள்ளுகிறார்கள். இந்த இயக்குநர்கள் சாதியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்