ETV Bharat / state

தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் - சேகர்பாபு - shekar babu open strong room in Thiruvaleswaram Temple

கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை திறந்து வைத்த சேகர்பாபு, தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்டுக் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

சேகர்பாபு  பாதுகாப்பு அறை  அண்ணாமலை  திருவாலீஸ்வரம் திருக்கோயிலில் பாதுகாப்பு அறை திறப்பு  சென்னை செய்திகள்  strong room  Thiruvaleswaram Temple  strong room in Thiruvaleswaram Temple  shekar babu  shekar babu open strong room in Thiruvaleswaram Temple  chennai news
சேகர்பாபு
author img

By

Published : Oct 25, 2021, 12:09 PM IST

சென்னை: கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை (strong room) அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்துவைத்தார்.

அவருடன் எழிலன் எம்.எல்.ஏ துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 22 சிலைகள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர், அதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.

பாதுகாப்பு அறை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு சிலையை பாதுகாக்க 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3087 கோயில்களில் திருமேனி பாதுகாப்பு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இரண்டு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3085 பாதுகாப்பு அறைகள் விரைவில் அமைக்கப்படும்.

கோயில்களை சுற்றி இருக்கும் மதுபானக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தர்களை பக்தி சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக பணியில் ஈடுபடவில்லை

சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி முக நூலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நீதி மன்றத்தில் சிதம்பரம் கோயில் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நான் தொகுதி அரசியல் மட்டும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 130க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளேன். இப்போது இருக்கும் இந்த கோயில் துறைமுகம் தொகுதியை சேர்ந்தது அல்ல.

பாதுகாப்பு அறை அமைப்பதற்கான அரசாணை 2017இல் வெளியிடப்பட்டும், அதிமுக அரசு நான்கு வருடமாக பாதுகாப்பு அறை அமைப்பதற்கான பணியில் ஈடுபடவில்லை. தற்போது நாங்கள் அந்த பணிகளை விரிவுப்படுத்தி வருகிறோம்.

சிலைகள் மீட்கப்படும்

வெளிப்படை தன்மையோடு, வேண்டியவர், வேண்டாதவர் எனப் பார்க்காமல் திறமையான பேராசிரியர்கள் நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த மூன்று கல்லூரி பேராசிரியர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சட்டப்படி வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வெளிநாட்டு விவகாரம் என்பதால் அவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

எனவே பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள், தமிழ்நாட்டை சேர்ந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி ஒன்றிய அரசிடம் பேசியுள்ளோம். விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும். எவ்வளவு சிலைகள் திருடப்பட்டுள்ளன, எவ்வளவு சிலைகள் எந்தெந்த அருங்காட்சியகத்தில் உள்ளன என்கின்ற கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது” என்றார்.

இதையடுத்து தொகுதி பக்கம் மட்டும் அமைச்சர் சேகர்பாபு சுற்றுகிறார் என்கிற அண்ணாமலை விமர்சனத்துக்கு, குற்றஞ்சாட்டும் நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: பொறியியல் கல்வியில் ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.