ETV Bharat / state

சகுந்தலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: அற்புதமான தோற்றத்தில் சமந்தா - சமந்தாவின் சகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
author img

By

Published : Feb 21, 2022, 5:09 PM IST

சென்னை: சமந்தா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'சகுந்தலம்' திரைப்படம் மிகப் பிரமாண்ட படைப்பாக உருவாகிவருகிறது. பன்மொழிப் படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகிறது.

தற்போது சகுந்தலம் படத்தில் சமந்தாவின் தோற்றத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் சமந்தா நேர்த்தியான தோற்றத்தில் பறவைகள், விலங்குகளால் சூழப்பட்ட காட்டில் அமர்ந்திருக்கிறார். சமந்தா எங்கோ ஆர்வமாகப் பார்க்கிறார், காட்டில் அவருடன் இருக்கும் தோழமைகள் அவரைப் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். இந்தப் போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்படி அமைந்துள்ளது.

சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சகுந்தலம் திரைப்படம்

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார். மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க, சேகர் வி. ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார்.

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அல்லு அர்ஹா அறிமுகம் ஆகும் இப்படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சமந்தாவின் ஃபர்ஸ்ட் லுக்

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார். குணசேகர் இப்படத்திற்காகத் தனித்த முயற்சியில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு திரைக்கதையை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: சிரிப்பழகன் கவின் புகைப்படத் தொகுப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.