ETV Bharat / state

போலி கரோனா பரிசோதனை சான்றிதழ்தாரர்கள் மீது கடும் நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி - ககன் தீப் சிங்

சென்னை மாநகராட்சி பகுதியில் போலியான கரோனா பரிசோதனைச் சான்றிதழ் மற்றும் போலித் தடுப்பூசிச் சான்றிதழ் வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி
author img

By

Published : Jan 5, 2022, 1:26 PM IST

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (ஜனவரி 5) வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை, ஆய்வகம், அரசு முகாம்களில் செய்யப்படும் பரிசோதனையின் முடிவுகளை காலை 8 மணிக்குள் மாநகராட்சியிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

நேற்று முன்தினம் (ஜனவரி 3) முதல் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 200 மருத்துவக் குழு அமைத்துள்ளோம். இந்த மருத்துவக் குழு, கரோனா பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று அவர்களை பரிசோதனை செய்த பிறகு தனிமைப்படுத்த வேண்டுமா அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள்.

தொலைபேசியில் ஆலோசனை

வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளவர்களின் வீடுகளில் கட்டாயம் தனியறை இருக்க வேண்டும். 15 மண்டலங்களில் தொலைபேசி அழைப்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 15 மண்டலங்களிலும் 15ஆம் தேதி கவுன்சிலிங் சென்டர் திறக்கப்பட்டது.

ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு முறையாவது கரோனா பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் உடல் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். வயதில் பெரியவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஸ்கிரீனிங் சென்டர் மூலம் முழுப் பரிசோதனை செய்யப்படுகிறது.

போலி சான்றிதழ்கள் மீது கடும் நடவடிக்கை

ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தனிமையில் உள்ளவர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க உள்ளோம். ஒவ்வொரு பகுதியிலும் ஐந்து தன்னார்வலர்கள் பணி செய்ய உள்ளனர்.

சென்னை மாநகராட்சி பகுதியில் போலியான கரோனா பரிசோதனை சான்றிதழ், போலி தடுப்பூசி சான்றிதழ் வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பில் 800 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு மையங்களை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளது.

அதுமட்டுமின்றிக் கடந்த முறை போன்று மீண்டும் கார் ஆம்புலன்ஸ் மூலம் இலவசமாகத் தொற்றாளர்களைப் பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்லும் திட்டம் இரண்டு நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெ., வேதா நிலையம் வழக்கு: அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.