ETV Bharat / state

கரோனா சிகிச்சையில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை! - chennai tamil news

கரோனா சிகிச்சையில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை

author img

By

Published : May 18, 2021, 8:28 PM IST

Updated : May 18, 2021, 9:17 PM IST

20:23 May 18

கரோனா சிகிச்சையில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக கரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நம் மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு அரசு செயல்பட்டு வருகிறது. 

மருத்துவ நெருக்கடி, மனநலப் பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இந்த நேரத்தில் ஒரு சில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதலமைச்சர் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. 

அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கு கையூட்டுப் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. 

தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணி நீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேற்படி செயல்கள் குறித்து உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலர், துறைத் தலைவர்கள், காவல் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்த நிலையில் உள்ள அலுவலராக இருப்பினும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்புப் பணியினையும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது. 

மக்களின் உயிர் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?

Last Updated : May 18, 2021, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.