ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்து வந்த 7 பேர் கைது

சென்னை: புறநகர் பகுதிகளில் ஐந்து வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்த 7 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Seven people have been arrested for selling cannabis in the suburbs of Chennai

author img

By

Published : Jul 26, 2020, 3:32 PM IST

சென்னையை அடுத்த பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர், சங்கர் நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறு சிறு கஞ்சா வியாபாரிகளை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சங்கர் நகர் பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணமாகவே இருந்துள்ளது.

இதனால் பல்லாவரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக பல்லாவரம் இணை ஆணையர் உத்தரவின் பெயரில், சங்கர் நகர் காவல் ஆய்வாளர் பர்க்துல்லா தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அனகாபுத்தூர் ஆற்றங்கரை பகுதியில் சிலர் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, இருவரும் பம்மல் பகுதியை சேர்ந்த உதயா(25) மற்றும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(19) என்பதும், இவர்கள் புறநகர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு நாள்களாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்(21), திரிசூலம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் ராஜ்(23), சத்திவேல்(23), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(22), பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர்(23) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் காவல் துறை நடத்திய விசாரணையில், அஜித் என்பவரின் தலைமையில் இந்த ஏழு பேரும் சேர்ந்து, சென்னை புறநகர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த 7 பேர் கொண்ட கும்பல் சுமார் ஐந்து வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது.

இந்த கும்பல் ஐந்து வருடங்களாகத் தேனி மாவட்டத்திலிருந்து சரக்கு லாரி மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும், தற்போது ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சா கடத்திவர முடியாத சூழ்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து காய்கறி வாகனங்கள் மூலம் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

அதேசமயம், இந்த ஊரடங்கு நாள்களில் மட்டும் சுமார் 37 லட்ச ரூபாய் அளவிற்கு கஞ்சாவை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 4 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஏழு பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.