சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி இறுதியாக ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கம் செய்வதும், நியமனம் செய்வதும் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமிஷாவை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோடியை மட்டும் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் சந்தித்தார். மறுநாள் இருவரையும் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் முன்கூட்டியே சென்னைக்கு திரும்பினார்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்யை இணைப்பதற்கான முயற்சியில் டெல்லி மேலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு பேருக்கும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:'கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் வைப்பது தவறில்லை' - கே.எஸ்.அழகிரி!