ETV Bharat / state

தீபாவளியின்போது காயப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தனி வார்டு! - Separate ward to treat the injured in kilpauk hospital during Diwali

சென்னை: தீபாவளியின்போது வெடி விபத்தில் காயப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

HOSPITAL
author img

By

Published : Oct 22, 2019, 6:10 PM IST

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவில் தனித்துவமான வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை மருத்துவர் வசந்தாமணி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் தீபாவளிக்காக சிறப்பு ஏற்படுகளை செய்துள்ளோம். 10 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்தில் சிக்குவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 26, 27, 28 ஆகிய மூன்று நாள்களும் 24 மணிநேரமும் இந்தச் சிறப்பு வார்டு இயங்கும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தலைமை மருத்துவர் வசந்தாமணி பேட்டி

அதுமட்டுமின்றி அவசர சிகிச்சைக்கு தேவையான செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்ஸ்), ஆக்ஸிஜன் சப்ளை எல்லாமே இங்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு உதவிப் பேராசிரியர், இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழு எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஒருவேளை பண்டிகையின்போது தீக்காயம் ஏற்பட்டால் பதற்றம் அடையாமல், காயம் ஏற்பட்ட இடத்தில் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும், அப்படிச் செய்தால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளி 2019 - சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நிலையும் பட்டாசு விற்பனையும்!

Intro:Body:தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மருத்துவமமையில் தலைமை மருத்துவர் வசந்தாமணி ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய பிரிவில் தீபாவளிக்காக சிறப்பு ஏற்படுகளை செய்துள்ளோம். 10 படுக்கை கொண்ட சிறப்பு வார்டு ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். நவம்பர் 26,27,28 ஆகிய மூன்று நாட்களுமே 24 மணிநேரமும் இந்த வார்டு செயல்படும்.

தீக்காயத்துக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவசர சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர்ஸ், ஆக்ஸிஜன் சப்ளை எல்லாமே இங்கு தயார் நிலையில் உள்ளது. எனவே எவ்வளவு தீக்காயம் என்றாலும் இங்கு வந்தால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படும்.

2016 ஆம் ஆண்டு 100 க்கும் மேலான நோயாளிகள் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளாகவும் வந்தனர். 2017 ஆம் ஆண்டு 75 பேர் சிகிச்சைக்காக வந்திருந்தனர். கடந்த வருடம் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 17 பேர் உள்நோயாளிகளாகவும் 30 க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாவும் சிகிச்சை பெற்றனர். இந்தமுறை அளிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்று நம்புகிறோம்.

தீக்காயம் ஏற்பட்டால் பதற்றம் அடையக்கூடாது. அருகாமையில் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். காயம் ஏற்பட்டவுடன் அதன்மீது தண்ணீரை ஊற்றினால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.