சாலை விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன், இழப்பீடுகோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட ஜெகதீசனின் உடலில் எத்தனை விழுக்காடு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து சான்றிதழ் வழங்க சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ வாரியத்துக்கு பரிந்துரைத்தது.
சான்றிதழ் பெற இருமுறை மருத்துவமனையில் சேர்ந்தும் சான்றிதழ் வழங்கப்படாததால், ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தபோது, சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டதாக ஜெகதீசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, மோட்டார் வாகன விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்கள் இழப்பீடு பெறுவதற்கான குறைபாடு சான்றிதழ் கோருபவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்படுமா? என்பது குறித்து மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் ஆம்புலன்ஸ்: முதலமைச்சரிடம் வழங்கல்