ETV Bharat / state

V Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு: ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By

Published : Jul 7, 2023, 4:30 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். ஆனால், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலாவுக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் விசாரிப்பார் என அறிவித்தார்.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சி.ஆர்.பி.சி பிரிவு 41 A படி கைது செய்யப்படவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காவல்துறை விசாரணை செய்யப்படவில்லை என்பதால் ஆட்கொணர்வு மனுவை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்தார் என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைதுக்கான காரணம் அமலாக்கத்துறையால் தெரிவிக்கப்படாததால் ஆட்கொணர்வு மனுவை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்தார் என தெரிவித்தார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆட்கொணர்வு மனு ஏன் விசாரணைக்கு உகந்தது அல்ல? என நீதிபதி பரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கவனிக்க வேண்டும். மேலும், ஆட்கொணர்வு விசாரணைக்கு உகந்ததா? நீதிமன்ற காவலில் உள்ள போது ஆட்கொணர்வு உகந்ததா? கைது முறையாக நடந்ததா? என்பதும் விசாரணை செய்யப்படும்.

நீதிபதிகள் எந்த அடிப்படையில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார்கள். அதற்கான காரணங்கள் என்ன? என்பதை விசாரணை செய்ய வேண்டும். இருதரப்பிலும் சமர்பிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.

அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் உள்ளதா? நீதிமன்ற காவலில் அருக்கும் போது ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியுமா? 15 நாட்கள் கடந்த நிலையில் காவல் விசாரணைக்கு எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை அனைத்து தரப்பு வாதத்திற்காக வழக்கு ஜூலை 11 தேதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: ஆளுநர் டெல்லி செல்ல இது தான் காரணமா? செந்தில் பாலாஜி குறித்த ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தும் ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.