ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளை மூட முடியாதது மனநிறைவை அளிக்கவில்லை - நீதிபதி கிருபாகரன் வேதனை - senior-most-judge kirubakaran farewell speech

உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியது திருப்தி அளித்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாததும் மனநிறைவை அளிக்கவில்லை என நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதி கிருபாகரன் வேதனை
நீதிபதி கிருபாகரன் வேதனை
author img

By

Published : Aug 19, 2021, 7:10 PM IST

Updated : Aug 19, 2021, 7:55 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கிருபாகரன், ஆகஸ்ட் 20ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மக்கள் நீதிபதி என அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெறுவது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

கண்கலங்கிய நீதிபதி

பின்னர் பேசிய நீதிபதி கிருபாகரன், தாய் - தந்தை, ஆசான்களை நினைவு கூர்ந்த போது கண்கலங்கினார். ஒரு போதும் தன்னை நீதிபதியாக நினைத்து கொண்டதில்லை எனவும், சாதாரண நபராகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

125 வயது உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட அவர், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்

வழக்குகளில் மனசாட்சிப்படி தீர்ப்பளித்ததாக கூறிய அவர், நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். எனினும் வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது மன நிறைவை அளிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

மதுவிலக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் எனவும் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : 'கொலிஜியம் பரிந்துரை செய்தி' - ஊடகங்கள் மீது தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி

Last Updated : Aug 19, 2021, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.