ETV Bharat / state

மருத்துவ படிப்புகளுக்கு பி.யு.சி. தகுதியில்லையா? பி.யு.சி. படித்தவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி! - மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

மருத்துவம் படிக்க விரும்பும் பி.யு.சி பயின்றவரின் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:43 AM IST

சென்னை: மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரும் பி.யு.சி. படித்த நபரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.யு.சி முடித்த 67 வயதான சென்னை பெருங்குடியைச் சேர்ந்த முனுசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் அவர், "தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தனக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கும் படி தேர்வுக் குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி இருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பி.யு.சி படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ளடக்கிய நேச்சுரல் சயின்ஸ் படித்து உள்ளதாகவும், நீட் தேர்வில் 720க்கு 408 மதிப்பெண்கள் பெற்று உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பரிசீலிக்கவில்லை என்றால் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்க கோரி தேர்வுக் குழுவுக்கு மனு அனுப்பியதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு தேர்வுக்குழு தரப்பு, மனுதாரர் ப்ளஸ் 2 படிக்காத காரணத்தால் அவரை கலந்தாய்வில் அனுமதிக்கவில்லை என்று விளக்கம் அளித்தது.

அப்போது நீதிபதிகள், நீட் தேர்வுக்கான கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் படித்து இருக்க வேண்டும் எனவும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்வுக்குழு தரப்பு நீட் தேர்வுக்கான தகுதி விதிகளே, மருத்துவ படிப்புக்கும் பொருந்தும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல் சுற்று கலந்தாய்வு முடிந்து விட்ட நிலையில், இரண்டாவது சுற்று கலந்தாய்வுக்கு முன், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்தலாமே தவிர தடை விதிக்க முடியாது - ஆன்லைன் நிறுவனங்களின் கூட்டமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.