ETV Bharat / state

1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதோருக்கு தடுப்பூசி: செல்வ விநாயகம் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதோருக்கு தடுப்பூசி என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : May 4, 2021, 8:41 PM IST

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ஆகியவை சார்பில் ரயில் பயணிகளுக்கு கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கரோனா விழிப்புணர்வு தொடர்பான காணொலியை வெளியிட்டார்.

கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து அல்ல. அதனை தனியார் மருத்துவர்கள் தேவையில்லாமல் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கட்டாயம் அல்ல.

கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்க தேவையில்லை. சென்னையில் மட்டும் ரெமிடெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசிடம் 1.50 கோடி தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது. அவை கிடைத்தவுடன் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் முழுமையாக தொற்றின் எண்ணிக்கை குறையும்" என்றார்.

இதையும் படிங்க: காஞ்சியில் அதிகரிக்கும் கரோனா: தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.