ETV Bharat / state

போலி சாஃப்ட்வேர் மூலம் அதிக விலைக்கு ரயில் டிக்கெட் விற்பனை: முக்கிய குற்றவாளி கைது - முக்கிய குற்றவாளி மும்பையில் கைது

ஆன்லைனில் போலி சாஃப்ட்வேரை பயன்படுத்தி அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டை விற்பனை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

Fake software arrest
போலி சாப்ட்வேர் கைது
author img

By

Published : Apr 14, 2023, 3:42 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் வேலூர் உள்ளிட்டப் பகுதிகளில் மோசடி கும்பல் ஒன்று, ஐஆர்சிடிசி இணையத்துக்குள் சென்று, ஆன்லைனில் விரைவாக டிக்கெட்களை முன்பதிவு செய்தும், அதை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்வதாகவும் ரயில்வே துறைக்கு புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே காவல்துறை தரப்பில் விழுப்புரம் ஆய்வாளர் அருண் குமார், திருவண்ணாமலை உதவி ஆய்வாளர் ஆதித்யா குப்தா ஆகியோர் அடங்கிய 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள 5 கடைகளில் ரயில்வே தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சாஃப்ட்வேரை பயன்படுத்தி ஐஆா்சிடிசி இணையதளத்திற்குள் சென்று விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலியான சாஃப்ட்வேர் மூலம் மோசடி அரங்கேற்றப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும் பீகாரை சேர்ந்த நபர், போலியான சாஃப்ட்வேரை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, பீகாருக்கு விரைந்த தனிப்படை போலீசார் தானாபூரை சேர்ந்த சைலேஷ் யாதவை கைது செய்தனர். வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், TATKAL SOFTWARE ALL.IN என்ற இணையதளத்தை உருவாக்கி, சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஐஆா்சிடிசி சாஃப்ட்வேருக்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வது போல், கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்றது அம்பலமானது.

மேலும் நாடு முழுவதும் 3,485 பேரிடம் கூடுதலாக ரூ.2000-ரூ.3500-க்கு டிக்கெட்டை விற்றதும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷம்ஷேர் ஆலம் நிசார் என்பவர் மும்பையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை விரைந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

மேலும் லேப்டாப் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை, திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: Shalu Shammu: ஷாலு ஷம்முவின் 2 லட்ச ரூபாய் செல்போன் மிஸ்ஸிங்.. நண்பர்கள் மீது சந்தேகம் என கேஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.