ETV Bharat / state

சுயமரியாதை திருமணம் செல்லும் என்ற தீர்ப்பால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?.. வழக்கறிஞர்களின் பார்வையில் தீர்ப்பு! - திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

Self Respect Marriage opinion: சுயமரியாதை திருமணங்கள் பற்றி நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சொல்லும் கருத்துக்களை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சுயமரியாதை திருமணம் குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறும் கருத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 2:10 PM IST

சென்னை: இந்து திருமணச்சட்டம் 7(A) படி சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர் முன்னிலையில் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதேநேரம், ரகசியமாக நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் செல்லுமா? என்பதையும் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

சுயமரியாதை திருமணம் : திருமணங்களின் போது நடைபெறும் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் இல்லாமல், விருப்பமான நபர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுதை சுயமரியாதை திருமணம் அங்கீகரிக்கிறது. மேலும், சிறப்பு திருமண சட்டம் 1954ன் படி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கிறது.

பின்னர், 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில், 1967ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணா, திருத்தம் கொண்டு வந்தார். சட்டப் பிரிவு 7(a)ன் படி மனம் ஒன்றி திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் தங்களை கணவன் - மனைவியாக அங்கீகரிக்க உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் முன்னிலையில் எளிமையான முறையில் சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். சுயமரியாதை திருமண சட்டம் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கிறது.

உயர் சாதியினருக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். பெரியாரின் நோக்கத்தை புரிந்து சுயமரியாதை திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்க சட்டத்திருத்தம் மூலம் அறிஞர் அண்ணா நடவடிக்கை மேற்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு : கடந்த 2014ஆம் ஆண்டு இளவரசன் என்பவர் தனது மனைவியை பெற்றோரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுவெளியில் யாருக்கும் தெரியாமல் வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தை செல்லாது என உத்தரவிட்டது.

மேலும், 2013ஆம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 313 திருமணங்களில் ஆயிரத்து 937 திருமணங்கள் வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது. திருமணம் முடந்ததும் தங்களை சேர்த்து வைக்கக்கோரி ஆண்கள் தொடரும் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகும் பெண்கள் திருமணமே நடைபெறவில்லை எனக் கூறினர். அதனால், வழக்கறிஞர்கள் முன்னிலையில் ரகசியமாக நடைபெறும் திருமணங்கள் இந்த திருமண சட்டம் 7 மற்றும் 7(a)ன் படி செல்லாது என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றதின் தீர்ப்பு : சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சுயமரியாதை திருமணம் செய்ய புரோகிதர்கள் தேவை இல்லை. அனைவருக்கும் அறிவித்து திருமணங்கள் செய்தால் அது சுயமரியாதை திருமணத்தின் நோக்கத்தையே சீரழித்துவடும். அதனால், சுயமரியாதை திருமணம் செய்ய விரும்புவோர் தாங்கள் கணவன் மனைவியாக இனி வாழப்போகிறோம் என அறிவிக்க ஒருவர் சாட்சியாக இருந்தால் போதும்.

அனைவருக்கும் அறிவித்து திருமணம் செய்தால் பெற்றோர்கள் எதிர்ப்பால் இடையில் பிரித்து வைக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் யாருக்கும் தெரிவிக்காமல் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெறும் திருமணங்கள் சட்டப்படியாக செல்லும் என தெளிவுபடுத்தியது.

இதையும் படிங்க: தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்! எதுக்கு தெரியுமா?

சுயமரியாதை திருமணங்கள் பற்றிய நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களின் கருத்துக்கள்: சீனிவாசராவ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். இந்து, கிறிஸ்து, இஸ்லாம் உள்ளிட்ட மதங்களில் வெவ்வேறு திருமண சடங்குகள் இருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் சடங்குகள் இல்லாத சுயமரியாதை திருமணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், திருமணங்களுக்காக செலவிடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் வீணாவது தடுக்கப்படும்.

சமுதாயத்தில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற நிலையை களைந்து சமத்துவத்தை ஏற்படுத்த சுயமரியாதை திருமணங்கள் தான் ஒரே தீர்வு. சாதி மறுப்பு திருமணங்களை இனி எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடத்தலாம். அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக முக்கியமாக, திருமணங்கள் என்ற பெயரில் பெண் வீட்டாரிடம் வாங்கப்படும் வரதட்சணை என்ற கொடிய நோய் சமுதாயத்தில் இருந்து அகற்றப்படும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

சாந்தகுமாரி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கூறுகையில், "சுயமரியாதை சட்டம் தமிழகத்தில் தான் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. சென்னை வடக்கு இணை பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரத்து 552 திருமணங்களும், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் 252 திருமணங்களும் நடைபெற்றன.

வழக்கறிஞர்கள் அறையில் நடைபெறும் திருமணங்கள் வழக்கறிஞர்களின் தொழிலாக மாறிவிட்டதாக கருதியதால் உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க வேண்டியது என்றாலும், உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்தின் படி சுயமரியாதை திருமணம் மீண்டும் வழக்கறிஞர்களின் தொழிலாக மாறிவிடுமோ? என்ற அச்சம் எழுகிறது.

வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தால் தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்திருக்கும். சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்வதை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விடுதி அறையில் மாணவர் தற்கொலை வழக்கு... பள்ளி தாளாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.