தனியார் ரயில்களை தமிழ்நாட்டில் இயக்குவது தொடர்பாக கடந்த திங்கள்கிழமை தென்னக ரயில்வே சென்னையில் ஆலோசனை மேற்கொண்டது. அதனடிப்படையில் சென்னை-பெங்களூரு, சென்னை-மதுரை, சென்னை-டெல்லி, சென்னை-கோயம்பத்தூர், சென்னை-ஹவுரா, சென்னை-மும்பை உள்ளிட்ட ஆறு வழித்தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம்விடுதல் முறை மூலம் வழித்தடங்கள் தனியாருக்கு வழங்கப்படும். மேலும் குறிப்பாக ரயிலை இயக்க நேரம், கட்டணம் உள்ளிட்டவைகளை தனியாரிடமே ஒப்படைக்க முடிவு செய்யப்ட்டுள்ளது.
ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: