ETV Bharat / state

“அண்ணாமலையின் வண்டவாளங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் டிரங்க் பெட்டியில் ஏற்றப்படும்”- அமைச்சர் சேகர்பாபு - bjp annamalai

Annamalai K: அண்ணாமலையின் வண்டவாளங்கள் அனைத்தும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் டிரங்க் பெட்டியிலே ஏற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

bjp annamalai will be exposed after parliamentary election says minister sekar babu
அண்ணாமலையின் வண்டவாளங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் டிரங்க் பெட்டியில் ஏற்றப்படும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 6:59 AM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 27வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நேற்று (அக்.17) நடைபெற்றது. இதில் சுற்றுலா, பண்பாடு துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர், ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், 2021 - 2022, 2022 – 2023 மற்றும் 2023 – 2024ஆம் நிதியாண்டுகளில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் திருப்பணிகள், கிராமப்புற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைக்க வழங்கப்பட்ட ரூ.30 கோடி நிதியில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 121 திருக்கோயில்களில் அமைந்துள்ள 125 பசுமடங்களை மேம்படுத்திட வழங்கப்பட்ட ரூ.20 கோடி நிதியில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், கோயில் பதாகை, திருவரங்கம் மற்றும் குணசீலத்தில் இந்த ஆண்டு அமைக்கப்பட்டு வரும் பசுமடங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருக்கோயில்களுக்கு புதிய 71 மரத்தேர்கள், 5 வெள்ளித்தேர்கள் மற்றும் 3 தங்கத்தேர்கள் உருவாக்கும் பணிகள், மரத்தேர் மராமத்துப் பணிகள், திருக்குளங்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், புதிய ராஜகோபுரங்களை கட்டும் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஆகிய பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

பணி நியமனம், பதவி உயர்வு: திமுக அரசு பொறுப்பேற்றபின், 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 539 அலுவலர்களின் பதவி உயர்வு உடனடியாக வழங்கப்பட்டது. காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் மூலமாகவும், திருக்கோயில்கள் மூலம் விளம்பரப்படுத்தி நேர்முகத் தேர்வு நடத்தியும் நிரப்பப்படுகின்றன.

அவசர பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாளர்களை தேர்வு செய்கிறோம். கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 81 இளநிலை உதவியாளர்களுக்கும், 100 தட்டச்சர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருக்கோயில்களில் இதுவரை 100 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறையில் பெரியளவில் பணியாளர் பற்றாக்குறை இல்லை. இது போன்ற துறை அலுவலர்களின் கூட்டம், திருமண நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து மாதம் ஒரு முறை கூட்டப்படுகிறது.

அலுவலர்களின் குறைகளை உதாசீனப்படுத்தாமல் உடனுக்குடன் களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியிட மாற்றங்களும், அலுவலர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் துறை செயல்பட்டு வருகிறது.

ஆன்மிகச் சுற்றுலா: ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கான ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை இருந்ததைப் போலவே, புரட்டாசி மாதத்தில் நடத்தப்பட்ட வைணவ திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா, வரும் பிப்ரவரி மாதத்தில் 300 நபர்கள் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திருச்செந்தூரில் நடைபெற்று வந்த தாராபிஷேகத்தில் இடர்பாடுகள் இருப்பின், அதனை களைந்து தொடர்ந்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளையாட்டுத் துறையில் மட்டும்தான் மதங்களைப் பிரித்து பார்ப்பதில்லை. மற்ற வீரர்களுக்கு எவ்வித மனசலனமும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

எம்மதமும் சம்மதம்: எம்மதமும் சம்மதமே, அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக கூறப்பட்ட கருத்தாகும். நாடு அமைதியாக இருக்க வேண்டும். அனைத்து மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். இதுபோன்ற சச்சரவுகளை தவிர்ப்பதுதான் நல்லது.

திராவிட முன்னேற்ற கழகத்தைப் பொறுத்தவரை முன்வைத்த காலை பின் வைப்பதில்லை. சனாதானம் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதன் உள்ளே செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குச் செல்வோம்.

அண்ணாமலை சொத்து பட்டியல்: திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை இரண்டாவது கட்ட பைல் என்று ஆளுநரிடம் கொடுத்த புகார் என்ன ஆனது? அதில் எங்காவது இதை இவர் கையூட்டாக பெற்றார், சலுகை காட்டினார் என்று ஆதாரப்பூர்வமாக எதையாவது கூறியுள்ளாரா? டிரங்க் பெட்டியைக் கொண்டு போய் கொடுத்ததுதான் மிச்சம்.

அண்ணாமலையின் வண்டவாளங்கள் அனைத்தும் கூடிய விரைவில், அதாவது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் டிரங்க் பெட்டியிலே ஏற்றப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 நபர்களுக்கு தானம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.