ETV Bharat / state

கோவை விவகாரத்தை ஏன் என்.ஐ.ஏ-விடம் தூக்கிக்கொடுத்தீர்கள்? - சீமான் கேள்வி - pasumponmuthuramalingam

உளவுத்துறை, காவல்துறை என பலவற்றை வைத்துக்கொண்டு கோவை விவகாரத்தை ஏன் என்.ஐ.ஏ-விடம் தூக்கிக்கொடுத்தீர்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Coimbatore car cylinder blast issue  car cylinder blast  Coimbatore car cylinder blast  NIA  Seeman  thevar jayanthi  thevar jayanthi 2022  chennai news  chennai latest news  Seeman question  சீமான் கேள்வி  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு  கார் சிலிண்டர் வெடிப்பு  நாம் தமிழர் கட்சி  சீமான்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்  தேவர் 115வது பிறந்த நாள்  தேவர்குருபூஜை  தேவர்ஜெயந்தி  pasumponmuthuramalingam  muthuramalingathevarbirthday
சீமான்
author img

By

Published : Oct 30, 2022, 4:39 PM IST

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த சீமான், 'உண்மையைப்பேசு, உறுதியாகப்பேசு, அதை உரக்கப்பேசு என எங்களைப்போன்ற இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு கூறியவர். மலர் மாலைக்கு கழுத்தை நீட்டுவது போல மரணப்படுக்கைக்கு எவன் கழுத்தை துணிந்து நீட்டுகிறானோ, அவனே உண்மையான வீரன் என மான தமிழ் மக்களுக்கு போதித்த மகத்தான பெருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவரது புகழைப் போற்றுவதில், பெருமைகொள்கிறோம்.

ஆளுநர் உளறி கொட்டுகிறார். ஆங்கிலேயர்கள் என்ன ரிஷியா?... நாட்டை கட்டமைப்பது என்ன ரிஷியின் வேலையா?... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டுகிறார். ஆனால், இங்கே உளவுத்துறை, காவல் துறை என பலவற்றை வைத்துக்கொண்டு என்.ஐ.ஏ-விடம் ஏன் தூக்கிக்கொடுத்தீர்கள்?... மாநிலத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ஒரே நாடு, ஒரே மொழி என வலுக்கட்டாயமாக திணிப்பது சரியல்ல. பல மொழிகள் பேசக்கூடிய நாட்டில் பேராபத்தை விளைவிக்கும். பிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களை ஆளுநராக நியமிப்பதை நிறுத்தவேண்டும். நீதிபதியாக ஓய்வுபெற்ற பிறகு நீங்கள் ஆளுநராக நியமிக்கிறீர்கள். அப்போது அவர்களிடம் என்ன நீதி இருக்கும்? மக்களுக்கு என்ன நியாயம், நேர்மை உண்மை தன்மை எங்கே இருக்கும்?. இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளின் கருத்தை நான் ஏற்கிறேன்.

ஊழல் லஞ்சம் பெறுபவர்களிடம் லட்சுமி, விநாயகர் துணை போவார்களா?... சாராயக்கடைகளில் சென்று வாங்குபவர்களிடமும், கொலை, கொள்ளை செய்பவர்களிடமும் காந்தி சிரித்துக்கொண்டே இருக்கும் நோட்டு செல்வது சரியா?..' என சரமாரியாகப் பல கேள்விகளை முன்வைத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

இதையும் படிங்க: மாநில காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா..? - ஜெயக்குமார் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.