திருநெல்வேலி: அருந்ததியர் இன மக்களை வந்தேறிகள் என விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் அருகே அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் அறிவித்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அங்கு வந்த ஆதித்தமிழர் பேரவையினரிடம் பாளையங்கோட்டை காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக போராட்டக்காரர்கள் 2 சீமான் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். உடனே, போலீசார் அதனை தடுத்து நிறுத்தி ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் சீமான் உருவபொம்மை எரிப்பு - ஏன் தெரியுமா?
நெல்லையில் சீமானின் உருவபொம்மையை சிலர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.