சென்னை: பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிமேகலை வினோத் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார்.
இதற்காக அவரது காரில் பூவிருந்தவல்லி வந்தார். ஆனால் பரப்புரை வாகனம் வரவில்லை. இதனால் கால் மணி நேரத்திற்கு மேல் காரிலேயே காத்திருந்தார். பின்னர் பரப்புரை வாகனம் வந்தவுடன் பரப்புரையை தொடங்கினார்.
பரப்புரையின் போது எப்போதும் இயர் மைக்கில் பேசுவது வழக்கம். அதேபோல் பூவிருந்தவல்லியிலும் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. ஆனால் இயர் மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் வேறொரு மைக் கொடுக்கப்பட்டது. அதிலும் சரியாக குரல் கேட்கவில்லை. இதனால் மேலும் ஒரு மைக்கை கொடுத்து அதனை வேட்பாளரை வைத்து பிடிக்க வைத்தனர்.
இத்தனை தடங்கலுக்கிடையே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த சீமான், வேட்பாளரின் பெயரை மறந்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் யோசித்து முன்னால் இருந்த விளம்பர பதாகையை பார்த்துபின் தான் வேட்பாளர் பெயரையும், தொகுதியையும் கூறினார்.
எப்போதும் அரை மணி நேரமாவாது பேசும் சீமான் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் சேராததால் சில நிமிடங்களிலேயே பேச்சை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: பெண்கள் அரசியலிலும் அதிகார மிக்கவர்களாக உயர்ந்திட வேண்டும் - சீமான்