தலைமைச் செயலகத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கியூ ஆர் பதிவு கொண்ட பலவகை பயன்பாட்டிற்கான அடையாள அட்டை விநியோகிப்பட உள்ளது. அதன்படி, சட்டப்பேரவை நூலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில், அரசு ஊழியர்களின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக வேளாண்துறை, போக்குவரத்துதுறை, பள்ளி கல்வித்துறை பொதுத்துறை சேர்ந்த ஊழியர்கள் மூன்று ஆயிரம் பேருக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது.