தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். நடைபெற்று முடிந்த இத்தேர்தலில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடந்து 30ஆம் தேதி இரண்டாம் கட்டமாக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ள தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் முடிவடையவுள்ளதால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆயிரத்து 551 வாக்குச் சாவடிகளில் வீடியோ கவரேஜ் வசதிகளைச் செய்து கண்காணிக்க உள்ளது. மேலும், நுண் பார்வையாளர்கள் 2,939 பேரும், பறக்கும் படைகள் 495 பேர் குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக காவல் துறையினர் மட்டுமின்றி முன்னாள் ராணுவத்தினரும் பயன்படுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!