ETV Bharat / state

நீதிமன்ற வளாகம் முன் கத்தி குத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

கொலைவழக்கு சம்பந்தமாக கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Aug 29, 2021, 10:33 AM IST

வெளியான சிசிடிவி காட்சிகள்
வெளியான சிசிடிவி காட்சிகள்

கோவை : கடந்த 2020ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வினோத்குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வந்த விஜயகுமார், ஜப்பான் என்கிற ஹரிகரன் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோவை மாநகர மத்திய சரக காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார், விக்னேஷ், காவலர்கள் ஞானவேல், மாதேஸ்வரன்,சுகந்த ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள், சாட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

இதில், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கருப்புசாமி, பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர் கப்பீஸ் குமார்,ராஜ்குமார் ஆகியோரை 12 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி, அரிவாள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது அப்பகுதி உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அய்யப்பனை கும்பல் விரட்டி வெட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் - பிஆர் பாண்டியன் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.