இது குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 331 பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும்.
மேலும் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் அளித்துள்ள நோட்டீஸுக்கு ஒரு மாதத்தில் உரிய ஆவணங்களுடன் பதில் அளிக்கவேண்டும். அவ்வாறு ஆவணங்கள் அளிக்கப்படாத பள்ளிகள் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக அறிவிக்கப்படும்.
பள்ளிக்கல்வித்துறையின் விதிமுறைகளின் படியும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு மூன்று மாதத்திற்குள் இரண்டு முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டும். உரிய ஆவணங்களை அளிக்காவிட்டால் அந்தப் பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பள்ளியை மூடுவதற்கு உத்தரவிடப்படும்.