ETV Bharat / state

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை

author img

By

Published : Mar 2, 2022, 9:32 PM IST

தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

schools-up-to-class-9-will-be-open-on-may-13

சென்னை : தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளி வேலை நாட்களாகும்.

மேலும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.

6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும்' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-23ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு தவிர, பிற மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.