அரையாண்டுத் தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதிவரை நடந்து முடிந்தது. அதன்பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை ஜனவரி 4ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவந்ததால் விடுமுறை ஜனவரி 6ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 6ஆம் தேதியான இன்று தேர்வு விடுமுறைகள் முடிவடைந்து, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மேலும், ஒன்றுமுதல் ஒன்பதாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவப் பாட புத்தகங்கள் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான அளவு புத்தகங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜன. 6இல் உள்ளூர் விடுமுறை