சென்னை: சென்னையில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழைப்பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னையில் உள்ள பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள் சாலையை விட தாழ்வாகவே இருக்கிறது. இதனால் அங்கு மழை நீர் தேங்கி நிற்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தாெடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.
சென்னை விரும்கம்பாகத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பள்ளிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. தேங்கியுள்ள மழைநீரை மழை நின்ற பிறகு. அகற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கொட்டும் மழை..தேங்கும் மழைநீரை வெளியேற்ற 20,000 பேர் களத்தில்