சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கண்ணகி தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சந்தரா, வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் புஷ்பலதா(14) தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார்.
பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாத காரணத்தினால், கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்வதற்கு எனக்குப் பிடிக்கவில்லை, இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் அடம்பிடித்து வந்துள்ளார்.
ஆனால், பெற்றோர் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து, இன்று அதிகாலை பெற்றோர்கள் புஷ்பலதாவை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர்.
பள்ளியிலிருந்து மதியம் வீடு திரும்பிய மாணவி புஷ்பலதா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து புடைவையால் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டார். வீட்டின் அருகே இருந்த அவருடைய சித்தி, வெகு நேரமாக வீட்டின் கதவு திறந்து கிடைந்ததைக் கண்டு வீட்டினுள் சென்று பார்த்தபோது, புஷ்பலதா தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது சித்தி அதிர்ச்சியில் உரைந்துள்ளார். பின்னர், அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், புஷ்பலதாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்குச் செனற் மாணவி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!