சென்னை: கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் இன்று மதியம் 1.30 மணி அளவில் பள்ளி மாணவர்கள் சிலர் மயிலாப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தரமணி ரயில் நிலையம் வரை மிக ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிய படியும், ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு இரு கால்களையும் தரையில் தேய்த்தவாறு சாகச பயணத்தில் ஈடுபட்டனர்.
அந்த ரயிலில் பயணித்த சக பயணிகள் அந்த மாணவர்களை எச்சரித்தும் சிறிதும் செவி சாய்க்காத அந்த பள்ளி மாணவர்கள் அடுத்த ரயில் நிலையத்திலும் அதே சாகசத்தில் ஈடுபட்டனர். இது போன்ற ஆபத்தான பயணங்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்களை ரயில்வே காவல்துறையினர் பிடித்து கடுமையான தண்டனைகள் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களது பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து கண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:நாய் குறுக்கிட்டதால் பைக்கில் சென்றவர் பேருந்துக்கடியில் விழுந்து உயிரிழந்த கொடூரம்