ETV Bharat / state

பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருட்டு: முக்கிய நபருக்கு போலீசார் வலைவீச்சு! - சைபர் கிரைம் போலீசார்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக மாணவர்களின் தகவல்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இந்த விவாகரத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

school students information theft case Police rushed to find the main person
பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருட்டப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபரை தேடி போலீசார் விரைந்துள்ளனர்
author img

By

Published : Mar 29, 2023, 12:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள், பள்ளிக்கல்வித் துறையால் சேகரித்து வைக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த தகவல்கள் EMIS என்ற பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மாணவர்களை தங்களது கல்லூரியில் சேர சொல்லி அலைமோதும் கல்லூரிகளுக்கு, இந்த விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தரவுகளை விலை கொடுத்தும் வாங்கும் பல கல்வி நிறுவனங்கள், இதன்மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்பலை சேர்ந்த ஒருவர் பேரம் பேசும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

6 லட்சம் மாநில பாடத்திட்ட மாணவர்களின் விவரங்களும், 35 ஆயிரம் சிபிசிஎஸ்இ பள்ளி மாணவர்களின் தரவுகளும் விற்பனைக்கு உள்ளதாகவும், குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு ஆன்லைன் வாயிலாக பணம் அனுப்பினால் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 6 லட்சம் மாணவர்களின் விவரங்களை தர இருப்பதாகவும் அந்த ஆடியோவில் மோசடி நபர் கூறியிருந்தார்.

இதையடுத்து, பள்ளி மாணவர்கள் விவரங்களை திருடி விற்பனை செய்வது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித் திட்ட மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி புகார் அளித்துள்ளார். மாணவர்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் வகையில் நடக்கும் இந்த தகவல் திருட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்த விவகாரத்தில் மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவர்களின் தரவுகள் போலியானவை என்றும், இணையங்களில் இருந்து திருடப்பட்ட தகவல்களை சேர்த்து கல்லூரிகளுக்கு விற்றதும் தெரியவந்துள்ளது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற ஆரம்பிப்பதால் அதனை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல் போலியான பள்ளி மாணவர்களின் தகவல்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க ஒரு சில உண்மையான பள்ளி மாணவர்களின் தகவல்களை சேர்த்து வைத்து மோசடி கும்பல் நம்பிக்கை ஏற்படும் படி செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக பல ஆண்டுகளாக மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. மோசடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை கண்டறிந்துள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்வதற்கு விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி வீதிகளில் கூலிங் கிளாஸுடன் கூலாக உலா வரும் அம்ரித் பால் சிங்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.