சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுடன் சேர்ந்து மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள எவர்வின் வித்யாசரம் பள்ளி மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 25 ஆயிரம் சோப்புகளை பயன்படுத்தி ஆங்கிலத்தில் 'கைகளைக் கழுவுங்கள், நீடூடி வாழுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட போர்டுடன் நின்றுள்ளனர். ரூ.10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சுமார் 1,000 பள்ளி மாணவர்கள் இணைந்து இந்தக் காட்சியை உருவாக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நோய் பாதிப்பைத் தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அவற்றில் பிரதானமானது கைகளை 20 நொடிகள் வரை நன்றாகக் கழுவ வேண்டும் என்பது. இதன்மூலம் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு?