ETV Bharat / state

ரயில் மோதி ஆறாம் வகுப்பு மாணவன் பலி - school student train accident at chennai

சென்னை: கொருக்குப்பேட்டையில் ரயில்வே இருப்புப் பாதையை கடக்க முயன்ற ஆறாம் வகுப்பு மாணவன் ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் மோதி ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

author img

By

Published : Apr 8, 2021, 7:46 PM IST

கொருக்குப்பேட்டை அண்ணா நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் சுமன் கொருக்குப்பேட்டை பேசின் பாலம் இடையே உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவர் ரயில்வே இருப்புப் பாதையை கடக்க முயன்றபோது கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த கொருக்குப்பேட்டை காவல் துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணைக் கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.