சென்னை: முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் 101வது பிறந்த நாள் இன்று(டிச.19) கொண்டாடப்பட்டு வருகிறது. பேராசிரியர் அன்பழகனின் 100வது ஆண்டு விழாவை ஒட்டி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சென்னை, டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் "நூற்றாண்டு வளைவு" திறந்து வைத்தும், பள்ளிக் கல்வித் துறையின் டி.பி.ஐ. வளாகத்திற்குப் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் எனவும் முதலமைச்சர் பெயர் சூட்டினார்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை வாளகத்தில் பேராசிரியர் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பின்னர் பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க:'நம்ம ஸ்கூல்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்