10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வின்போது காய்ச்சல் இருந்தால் அவர்களை தேர்வெழுத அனுமதிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து கல்வித் துறை, சுகாதாரத் துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
பொதுத்தேர்வின்போது மேற்கொள்ளவிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
- 46 லட்சம் முகக்கவசங்கள் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து உதவி எண்கள் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும். அதன் மூலம் தேர்வு தொடர்பான சந்தேகங்களை காலை 8 முதல் மாலை 8 வரை தெரிந்துகொள்ளலாம்.
- தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தனித்தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
- அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
- 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்களில் 9.50 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர்.
- வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தேர்வர்கள் தனி அறையில் அமரவைத்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் - அரசுத் தேர்வுத்துறை