இந்தியாவின் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாட்டில் மட்டும் 1220 கிளைகளை வைத்துள்ளது. இதில், 40 கிளைகள் மட்டுமே கிராமப்புறங்களில் இயங்கிவருகிறது. இந்நிலையில், கிராமப்புறங்களுக்கும் நடுத்தர நகரப்புறங்களுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டில் புதிதாக 50 கிளைகள் திறக்கப்படும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வங்கி சேவை முழுவதுமாக கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கிளைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும், ஏடிஎம்களின் எண்ணிக்கை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை எனவும் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.