ETV Bharat / state

ஆஸ்திரேலியாவில் நடந்த அதே பாணியில் சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் திருட்டு! - latest tamil news in tamil

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் நடந்த திருட்டுச் சம்பவம்போல், 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது என சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவிக்கிறார்.

sbi-atm-theft-story-full-details
ஆஸ்திரேலியாவில் நடந்த அதே பாணியில் சென்னை எஸ்பிஐ ஏடிஎம்களில் திருட்டு!
author img

By

Published : Jun 23, 2021, 7:27 AM IST

சென்னை: சென்னை செனாய் நகர்ப் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டது வங்கி அலுவலர்களுக்குத் தெரியவந்தது. அந்த ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வங்கி அலுவலர்கள் ஆய்வுசெய்தபோது இரு நபர்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்ததுபோல் காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆனால், கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக காண்பிக்காததால் வங்கி அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதேபோல் விருகம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், வேளச்சேரி என ஒரேநாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து முதற்கட்ட விசாரணையில் எஸ்பிஐ கேஷ் டெபாசிட் மெஷினை மட்டுமே குறிவைத்து அந்தக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. ஓகேஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்திய பின்பு பணம் வெளியே வரும். ஆனால், 20 நொடிக்குள் எடுக்கவில்லையென்றால் அந்தப் பணம் மீண்டும் இயந்திரத்திற்குள்ளே சென்றுவிடும்.

சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்

அதைப் பயன்படுத்திக்கொண்ட கும்பல் சென்சார் ஷட்டரை விரலால் மறைத்துப் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் போலி முகவரி மூலம் தொடங்கிய கணக்கை வைத்து கொள்ளையடித்ததால் அவர்களை நெருங்குவதில் காவல் துறையினருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெபாசிட் மிஷினில் பணம் எடுக்கத் தடை

மேலும், கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மத்திய குற்றப்பிரிவு வங்கித் தடுப்பு காவலர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, கொள்ளையர்கள் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் மிஷினை மட்டுமே குறிவைத்து கொள்ளையடித்தது ஏன் என நடத்திய விசாரணையில் அந்த மிஷினில் மட்டுமே பணம் வெளியே வரும் இடத்தில் சென்சார் உள்ளது தெரியவந்துள்ளது.

மற்ற ஏடிஎம் மிஷினில் மற்றொரு இடத்தில் சென்சார் இருப்பதால் கொள்ளை அடிக்க முடியாது என எண்ணி எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் மிஷினை மட்டுமே கொள்ளை கும்பல் குறிவைத்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய எஸ்பிஐயின் தலைமைப் பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், "எஸ்பிஐ வங்கி இரண்டு வகையான பணம் செலுத்தும் எந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அவைகளில் ஒரே நிறுவனத்தின் தயாரிப்பான எந்திரத்தில் மட்டும் இந்த மோசடி நடந்துவருகிறது.

அதனால், அந்த குறிப்பிட்ட வகை எந்திரங்கள் பயன்படுத்தப்படும் ஏடிஎம் மையங்களில், பணத்தை எடுக்கும் சேவை வாடிக்கையாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் இந்தச் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ஹரியானா கும்பல்?

காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "சென்னையில் 17, 18ஆம் தேதிகளில் மட்டும் தொடர்ந்து இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. பின்னர் மற்ற மாவட்டங்களில் நடந்திருக்கின்றன. இந்த நூதன முறையில், தமிழ்நாடு முழுவதும் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

இவை வங்கி பணமே தவிர, வாடிக்கையாளர்கள் பணம் இல்லை. சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார்.

இதுபோன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் 2013ஆம் ஆண்டு நடைபெற்றதாக குறிப்பிடும் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏடிஎம் கொள்ளையர்கள் பயன்படுத்திய முறையை ஃபோர்க்கிங் (Forking) அல்லது கேஷ் கிராபிங் (Cash Grabbing) என அழைக்கப்பட்டுவருவதாகவும், இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறார்.

கொள்ளையர்கள் ஹரியானாவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை அங்கு விரைந்துள்ளது. இதே பாணியில் மற்ற மாநிலங்களில் குற்றம் நடந்துள்ளதா என விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.