ETV Bharat / state

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: கைதான அமீரை 5 நாள் காவலில் எடுக்க அனுமதி - ஹரியானா மேவாட்

எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமீர் அர்ஷை ஐந்து நாள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

sbi-atm-theft-case-court-order-to-take-custody-accused
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: கைதான அமீரை 5 நாள் காவலில் எடுக்க அனுமதி
author img

By

Published : Jun 25, 2021, 5:57 PM IST

சென்னை: சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பிஐ டெபாசிட் மிஷன்களை மட்டும் குறி வைத்து சுமார் 50 லட்சம் ரூபாய் பணம் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை செய்த குற்றவாளிகளில் ஒருவரான அமீர் அர்ஷ் என்பவரை தமிழ்நாடு காவல்துறையினர் ஹரியானாவில் வைத்து கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்துவந்தனர்.

தொடர்ந்து, அவரை பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

போலீஸ் காவலுக்கு அனுமதி

இந்நிலையில், அமீர் அர்ஷை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூவிருந்தவல்லி நீதிமன்ற நடுவர் முன்னிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவானது இன்று மாலை விசாரணைக்கு வந்தபோது, அமீரை ஐந்து நாளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்ட்டது.

போலீஸ் காவலில் அமீர் விசாரிக்கப்படும் போது, கொள்ளையர்கள் எங்கு பதுங்கியுள்ளனர்? எந்த எந்த வங்கிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.

10 பேர்..5குழு.. பெர்ஃபெக்ட் ஸ்கெட்ச்

இதற்கு முன்னர், அமீரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 10பேர் அடங்கிய 5 குழு களமிறங்கி இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலமே ஹரியானாவில் உள்ள கூட்டாளிகளுக்கு அனுப்பிவிட்டு விமானம் மூலம் ஹரியானா சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையின்ர், ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டம் ஃபரிதாபாத்தில் முகாமிட்டு மீதமுள்ள குற்வாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன திருட்டு நடந்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.