ETV Bharat / state

தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்... வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். மாநிலத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

author img

By

Published : Nov 9, 2022, 12:43 PM IST

Updated : Nov 9, 2022, 1:14 PM IST

சென்னை: மயிலாப்பூரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, வாக்களிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று முதல் அடுத்த மாதம் 8-12-2022 வரை ஒரு மாதத்தில் வாக்காளர் பெயர் பட்டியல் சேர்ப்பது நீக்குவது, உன் முகவரி மாற்றம் உள்ளிட்டவை செய்து கொள்ளலாம். இதற்காக படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவை வாக்காளர் முகாம் அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் ஆன்லைன் மூலமும், Voters helper ஆப் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர்.3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர்.

மேலும் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக ஆண்டிற்கு நான்கு மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி ஒன்றாம் தேதி, ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஜூலை ஒன்றாம் தேதி, அக்டோபர் ஒன்றாம் தேதி ஆகிய தினங்களில் 17 வயது முடிந்து 18 வயது தொடங்கும் நபர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். மறைவு காரணமாக 2.44 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைக்கு மேல் பதிவு செய்த 15.25 லட்சம் நபர்களின் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இதுவரை படிவம் 16 மூலம் 56.09% வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னையில் 20 % வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 17 வயது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநரை திரும்பபெற வேண்டும்; எம்.பி.க்களின் மனு குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

Last Updated : Nov 9, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.