மேஷம்: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலம் முழுவதும் மேஷ ராசிக்காரர்களுக்கு தொடங்கும் காரியத்தில் நல்ல பலன்களே கிடைக்கும். மற்றவர்களிடையே உங்களின் மதிப்பு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு பல வழிகளில் இருந்து உதவிகள் கிட்டும். மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்பு அதிகமுள்ளது.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானுக்கு தண்ணீரைக் காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
ரிஷபம்: சூரியன் தற்போது தனுசு ராசிக்குள் நுழைவதால், இந்த நேரத்தில் சொத்து தொடர்பான விஷயங்களில் முடிவுகள் எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் முதலீடு தொடர்பான முடிவுகளை இப்போதைக்கு தள்ளிப் போடுவது உதவும்.
பரிகாரம்: தினமும் காயத்ரி சாலீசாவைப் பாராயணம் செய்து வருவது கைகொடுக்கும்.
மிதுனம்: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், உங்கள் ஈகோ அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்திடுங்கள். இச்சமயம் உங்கள் தொழில் பார்ட்னருடனான உறவில் விரிசல் உருவாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். சுற்றுலா செல்லவும் திட்டமிடுவீர்கள்.
பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரத்தினை ஒரு ஜெபமாலை அளவு (108 முறை) உச்சரித்து வருவது பலன் தரும்.
கடகம்: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் பல துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். அரசு வேலையில் இருந்து புதிய வேலை கிடைக்கும். வருமாண்டில் அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானுக்கு குங்குமம் கலந்த நீரைக் காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் தனுசு ராசியில் நுழைவதால் சுமாரான பலன்களே கிடைக்கும். இச்சமயத்தில் காதலிப்பவர்களுக்கு நேரம் சற்று கடினமாகவே இருக்கும். சமூகத் துறையில் கவனமாக செயல்பட வேண்டும்.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானின் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்து வருவது கைகொடுக்கும்.
கன்னி: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் கன்னி ராசியினர் இந்த ஒரு மாத காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு நிறைய வேலை இருக்கலாம். எனவே மன அழுத்தத்தைத் தவிர்த்திட முயற்சியுங்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிரமம் ஏற்படும்.
பரிகாரம்: ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வது பலன் தரும்.
துலாம்: தனுசு ராசியில் சூரியன் நுழைவது துலாம் ராசியினருக்கு நன்மை தரும். தீராத பல பிரச்சனைகள் தற்போது தீரும். வருமானம் அதிகரிக்கும் மாதம். மேலும் நீங்கள் திடீர் பயணத்தையும் மேற்கொள்ளலாம். இச்சமயம் சில முக்கியமான அரசாங்க வேலைகளையும் நீங்கள் முடிப்பீர்கள்.
பரிகாரம்: தினமும் சூரிய அஷ்டமத்தைப் பாராயணம் செய்யவது பயனளிக்கும்.
விருச்சிகம்: தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வழக்கத்தை விட சிறப்பாகவே இருக்கும். இச்சமயம் கோபப்படுவதைத் தவிர்ப்பது ஆதாயம் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
பரிகாரம்: தினமும் காயத்ரி சாலிசாவைப் பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு: சூரியன் தற்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அதனால் இந்த நேரம் உங்களுக்கு நல்லதாகவே இருக்கும். ஆனால் நீங்கள் ஆணவம் கொண்டவராகவும் மாறலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்களும் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து பல வேலைகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானை வணங்குவது கூடதல் பலனைக் கொடுக்கும்.
மகரம்: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தற்போது நீங்கள் சில முக்கியமான வேலைகளைச் செய்வீர்கள். நேரமும் காலமும் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. எதிரிகளை வெல்வீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம்(தண்ணீரால் அபிஷேகம்) செய்வது பலன் தரும்.
கும்பம்: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சில முக்கிய அரசு வேலைகளைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பதோடு லாபமும் கிடைக்கும். இச்சமயம் ராசிக்காரர்களின் தந்தையின் அறிவுரைப்படி வேலை செய்வது நல்லது.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானுக்கு குங்குமம் கலந்த நீரைக் காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்து வருவது பலன் தரும்.
மீனம்: சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இச்சமயம் சொத்து தொடர்பான பல வேலைகளை நீங்கள் எளிதாக முடிக்க முடியும். நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு கோதுமை, வெல்லம் போன்றவற்றைத் தானமாக வழங்குவதனால் பலன் கிட்டும்.