விருதுநகர்: சாத்தூர் தாயில்பட்டியில் உள்ள கலைஞர் காலனியில் சூர்யா(25). என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வெடிவிபத்தில், அவரது வீடு தரைமட்டமானது. மேலும், அருகருகே இருந்த 5க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்த வெடிவிபத்தில், ராஜா என்பவரது மனைவி கற்பகவள்ளி(35), அப்பலோ என்பவரது மனைவி செல்வமணி(35), ரஃபியா சல்மான்(5) ஆகிய மூவர் உயிரிழந்ததனர். விருதுநகர் தீயணைப்பு மாட்ட அலுவலர் தலைமையில் வெம்பக்கோட்டை, சாத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, படுகாயமடைந்த சூர்யா, சோலையம்மாள் (60) ஆகிய இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் விசாரணை மேற்கொண்டார். வீட்டு உரிமையாளர் சூர்யா(25), அப்பலோ(40), பிரபாகர் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அப்பலோ, பிரபாகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து வயது குழந்தை, இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் வெடி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடலூர்: அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து.