ETV Bharat / state

அதிமுகவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சசிகலா? ஒருவார காலம் சுற்றுப்பயணம் தொடக்கம்! - ஓபிஎஸ்

அதிமுகவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சசிகலா தனது ஒருவார கால அரசியல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

சசிகலா
சசிகலா
author img

By

Published : Oct 26, 2021, 4:50 PM IST

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தொடர்ந்து, தேர்தல் நேரத்திலும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது மீண்டும் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஃபோனில் பேசி வந்த அவர், தற்போது நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அதிமுக கொடி கட்டிய காரில், ’கழகப் பொதுச்செயலாளர் சசிகலா; என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அதிமுக பொன் விழாவின்போது எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவர் முன்னதாகத் திறந்து வைத்தார். மேலும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் சசிகலா

இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று (அக்.26) காலை தஞ்சாவூர் புறப்பட்டார். அவருடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். மேலும் அதிமுக நிர்வாகிகளையும் அவர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நாளை (அக்.27) தஞ்சாவூரில் நடக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொள்கிறார்.

அதன்பின் அங்கிருந்து 28ஆம் தேதி மதுரைக்குச் சென்று தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார். அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தொடர்ந்து மரியாதை செலுத்துகிறார். ’அதிமுகவை மீட்பேன்’ என்று சசிகலா முன்னதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில் தனது முதல்கட்ட அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிய ஓபிஎஸ்

நேற்று (அக்.25) மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், "சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்" என்று கூறினார். இது அதிமுகவில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாகி வருகிறது.

ஓபிஎஸ்-க்கு எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

இந்த நிலையில் இன்று தனது ஒரு வார கால அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா, தென் மண்டல அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுடன் சந்திப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் கட்சி நிர்வாகிகள், சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.

இச்சூழலில், சசிகலாவின் சுற்றுப்பயணம், ஓபிஎஸ் கருத்து, ஜெயக்குமாரின் எதிர் கருத்து என அதிமுகவின் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.

இதையும் படிங்க: மக்களுக்கு அறிவுரை வழங்க முதலமைச்சருக்கு அறிவுறுத்திய ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.